கோடை காலம் வந்தாலே… உடல் மட்டும் இல்லை, மனசும் சோர்ந்து போயிடும் இல்லையா?
காலை-ல வெளியே போனாலே வெயில் தலைக்கு மேல அடிக்குது. மதியம் ஆகும் போது சோர்வு, தாகம், சில சமயம் தலைவலி கூட ஆரம்பிக்குது.
“எவ்வளவு தண்ணீர் குடிச்சாலும் போதலையே…”ன்னு தோணுது, correct-a? இது தான் கோடைக்காலத்தின் ஆரம்பம்.
ஒரு சின்ன example சொல்றேன். ஒரு நாள் வெயிலில் வெளியே போயிட்டு வந்த பிறகு, நான் நேரடியாக fridge-ல இருந்த cold drink குடிச்சேன். அந்த நேரத்தில் நல்ல refresh feel ஆனது. ஆனா சில நேரத்திலேயே மீண்டும் தாகம், heaviness. உடம்பு light-ஆ இல்லாத feeling. அப்போ தான் புரிந்தது நாம் குடிக்கிறதால instant cool கிடைக்கலாம், ஆனா அது உடலுக்கு actual-ஆ cooling கொடுக்கிறதா என்பது வேற விஷயம்.
நம்ம உடம்புக்கு வெயில்காலத்தில் தேவையானது வெறும் குளிர்ச்சி இல்ல; அது உள்ளிருந்து சமநிலையை maintain பண்ணும் hydration. அதற்காக தான் நம்ம முன்னோர்கள் simple-ஆ இருந்தாலும் effective-ஆ இருந்த இயற்கை பானங்களை தினசரி வாழ்க்கையில் சேர்த்திருந்தாங்க. நீர்மோர், எலுமிச்சை பானம், பனங்கற்கண்டு சர்பத் போன்றவை வெறும் thirst quencher இல்ல — உடல் சூட்டை குறைத்து, ஜீரணத்தையும் energy-யையும் balance பண்ண உதவுகின்றன.
இப்போ எனக்குள்ள உள்ள கேள்வி என்னனா, நாம் ஏன் இந்த simple habits-ஐ விட்டுட்டோம்? வசதிக்காக easy drinks-க்கு போயிட்டோமா? அல்லது இந்த natural options-ன் value நமக்கு தெரியாம போயிடுச்சா? சரி பரவாயில்லா, நம்ம இப்போ வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய முக்கியமா உங்கள் உடல் அதை ஏற்றுக்கொண்டு, நாளுக்குநாள் மாற்றத்தை உணர வைக்க உதவும் 4 எளிய பானங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த கோடையில் ஒரு small change பண்ணிப் பார்ப்போமா?
1. இளநீர் - இயற்கை தரும் முழுமையான குளிர்ச்சி பானம்
கோடைக்காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் போது, உடல் “எனக்கு ஏதாவது refresh வேண்டும்”ன்னு சொல்லும், அந்த நேரத்தில் பலர் cool drinks-க்கு போயிடுவாங்க. ஆனா உண்மையில், உடலுக்கு சரியான refresh தரக்கூடியது பானம் ஒரு இளநீர். ஒரு குளிர்ந்த இளநீர் கையில் கிடைத்தால் என்ன feeling இருக்கும் தெரியுமா? அதுதான் கோடைக்காலத்தில் நமக்கு கிடைக்கும் எளிய ஆனாலும் மிகச் சிறந்த ஆரோக்கிய பானம்l
ஏன் இளநீர் special?
இளநீர் வெறும் தாகம் தீர்க்க மட்டும் இல்ல, குடிச்ச உடனே உடம்பே லைட்டா, சுறுசுறுப்பா ஆகுற மாதிரி ஒரு உணர்வு தரும். ஏன்னா, இதுல இயற்கையாகவே உடலுக்கு தேவையான மினரல்கள் நிறைஞ்சு இருக்கு. குறிப்பாக பொட்டாசியம், சோடியம், மக்னீஷியம் போன்றவை உடலில் நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. வெயிலில் நாம வேர்க்கும் போது இவையே உடலில் குறைந்து போகும். அந்த குறையை உடனே நிரப்பும் சக்தி இளநீருக்கு உண்டு. இது குடிக்க லைட்டா இருக்கும், வயிறு நிறையா குடிச்ச மாதிரி ஹெவியா feel வராது. குடிச்சதும் உடம்பு உடனே ஏத்துக்கும். அதனால தான் சோர்வா இருந்தாலும், லேசா தலைசுற்றல் மாதிரி இருந்தாலும், உடம்பு நீர் குறைஞ்சது போல feel ஆனா, ஒரு இளநீர் குடிச்சா கொஞ்ச நேரத்துலவே மீண்டும் சுறுசுறுப்பா ஆகிடும்.
எப்படி, எப்போது குடிக்கலாம்?
காலை நேரம் வெறும் வயிற்றில் ஒரு இளநீர் குடித்தால் உடலை குளிர்விக்கவும், அந்த நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்க உதவும். அப்படி இல்லேன்னா, மதியம் வெயிலில் வெளியே சென்று வந்த பிறகு குடித்தால் உடலில் இழந்த நீர்ச்சத்தை விரைவாக நிரப்பும் சக்தி உடையது. மிக அதிகமாக குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு 1 அல்லது 2 இளநீர் போதுமானது. முக்கியமா, புதிசா உடைத்த இளநீரையே தேர்வு செய்வது நல்லது. ரொம்ப நேரம் வச்சு குடிப்பதை தவிர்க்கலாம்.
நன்மைகள்
- உடலை உடனே குளிரவைக்கும்.
- நீர்ச்சத்து குறைவை தடுக்கிறது.
- ஜீரணத்திற்கு உதவுகிறது.
- தோல் ஆரோக்கியமாக, பளபளப்பாக இருக்க உதவும்.
- சோர்வு மற்றும் தலைசுற்றலை குறைக்க உதவும்.
கோடைக்காலத்தில் நம்ம உடம்புக்கு அதிகம் தேவைப்படுவது “தண்ணீர்”. அந்த தேவையை இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் நிறைவேற்றும் ஒரு சிறந்த வழி தான் இளநீர். நாள்தோறும் கிடைக்கும் இந்த எளிய பானத்தை நம் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டால், வெயிலையும் சுலபமாக சமாளித்து விடலாம்.
2. மோர் (Buttermilk) - பாரம்பரிய குளிர்பானம்
வெயில் அதிகமா இருக்கும் நேரத்தில், சாப்பாட்டுக்குப் பிறகு என்ன குடிக்கலாம் என்று யோசிக்கிறீங்களா? தண்ணீர் குடிச்சாலும் அந்த தாகம் அடங்குன மாதிரி இல்லையா? அப்படியான நேரத்தில, நம்ம ஊர்-ல மோர் தான் சரியான பதில்.
ஏன் மோர் special?
மோர் பாக்க சாதாரணமா இருக்கும், ஆனா உடம்புக்கு இது ரொம்ப நல்லது. தயிர்ல இருந்து தயாரிக்கப்படுவதால், இது வயிற்றுக்கு நல்லது. வெயிலால் உடம்பு சூடாகி இருக்கும் போது, மோர் குடிச்சா உடனே ஒரு குளிர்ச்சி கிடைக்கும். மேலும், இது ஜீரணத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக காரம் அதிகமான சாப்பாடு சாப்பிட்ட பிறகு, ஒரு கப் மோர் குடிச்சா வயிறு லைட்டா இருக்கும்.
எப்படி, எப்போது குடிக்கலாம்?
மதிய உணவுக்குப் பிறகு மோர் குடிப்பது மிகவும் நல்லது. அதுக்கூட கொஞ்சம் உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்தா இன்னும் சுவையும், பயனும் அதிகரிக்கும். வெயிலில் வெளியே போயிட்டு வந்த பிறகும் மோர் குடிக்கலாம் உடம்பு உடனே ரிலாக்ஸ் ஆகும்.
மோர் குடிப்பதால உடம்புக்கு கிடைக்கும் நன்மைகள் என்னனா, இது உடலை குளிர்விக்க உதவுவதோட, ஜீரணத்தையும் நல்லா மேம்படுத்தும். வெயிலால வரும் வயிற்று எரிச்சல் மாதிரியான பிரச்சனைகளை குறைக்கவும் இது உதவும். அதே மாதிரி உடம்பை லைட்டா, சுறுசுறுப்பா வைத்திருக்கவும் மோர் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.
நம்ம வீட்டிலேயே எளிதாக தயார் செய்ய முடியும் இந்த மோர், கோடைக்காலத்தில் தினசரி பழக்கமாக இருந்தா, வெயிலின் தாக்கம் பாதிக்காமல் இருக்க முடியும்.
3. நன்னாரி & எலுமிச்சைச் சாறு - உடல் சோர்வை நீக்கும் பானம்
வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில், சும்மா இருந்தாலும் உடம்பு சோர்ந்து போன மாதிரி இருக்கும் இல்லையா? தண்ணீர் குடித்தாலும் அந்த சுறுசுறுப்பு திரும்ப வராது போல தோன்றும். அப்படியான நேரத்தில் நன்னாரி மற்றும் எலுமிச்சைச் சாறும் சேர்ந்து ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
ஏன் இது நல்லது?
நன்னாரி என்பது Indian Sarsaparilla என்ற செடியின் வேர். இது இயற்கையாகவே உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது. அதோட சேரும் எலுமிச்சைச் சாறு உடம்புக்கு ஒரு புத்துணர்ச்சி தரும் மாதிரி இருக்கும். இந்த இரண்டு சேரும் போது உடல் உள்ளிருந்து குளிர்ச்சி அடையும். வெயிலில் அதிகமாக வியர்வை வந்துட்டா, உடம்பில் உப்பு சமநிலை குறையும். அதை சரி செய்யவும் இந்த நன்னாரி & எலுமிச்சைச் சாறு உதவும்.
எப்படி குடிக்கலாம்?
ஒரு கிளாஸ் குளிர்ந்த தண்ணீரில் 2 முதல் 3 ஸ்பூன் நன்னாரி சர்பத் ஊத்திக்கலாம். அதோட அரை எலுமிச்சை பிழிந்து நன்றாக கலக்க வேண்டும். சிலர் லேசா உப்பு அல்லது தேன் சேர்த்தும் குடிப்பாங்க அது அவரவர் tasteக்கு ஏற்ப. இதைக் காலை நேரத்திலோ அல்லது வெயிலில் வெளியே போயிட்டு வந்த பிறகோ குடிச்சா உடம்புக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும், சோர்வும் கொஞ்சம் குறையும்.
அதன் நன்மைகள்
நன்னாரி உடலுக்குள் இருக்கும் அதிக வெப்பத்தை குறைக்க உதவுகிறது. வெயிலால் ஏற்படும் தாகம், சோர்வு போன்ற உணர்வுகளை சமநிலைப்படுத்தும் தன்மை இதுக்கு உண்டு. உடல் நீர்ச்சத்தை சரியாக வைத்திருக்க உதவுவதால், லேசான சோர்வு அல்லது சூடாக இருக்கிற மாதிரி feel ஆனாலும் அது குறைய உதவும். மேலும், இயற்கை மூலிகை என்பதால் உடலை மெதுவாக குளிர்விக்கும் தன்மை கொண்டது, அதனால் கோடைக்காலத்தில் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
4. தர்பூசணி ஜூஸ் - குளிர்ச்சியும் இனிமையும் சேர்த்த பானம்
வெயில் கொளுத்தும் நேரத்தில் ஒரு தர்பூசணி ஜூஸ் குடித்தால், உடம்பே கொஞ்சம் cool ஆகிற மாதிரி இருக்கும் இல்லையா? சோர்வா இருந்தாலும், அந்த ஒரு சிப் குடித்ததும் உடனே ஒரு ரிலீஃப் கிடைக்கும்.
ஏன் தர்பூசணி special?
தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்ட பழம். அதனால் உடம்பில் குறைந்திருக்கும் நீரை உடனே நிரப்ப உதவுகிறது. இயற்கையாகவே குளிர்ச்சி தரும் தன்மை இருப்பதால், வெயிலின் தாக்கத்தை குறைக்க இது ரொம்ப உதவியாக இருக்கும். இதோட சுவையும் லேசான இனிப்பு தான், அதனால் சர்க்கரை சேர்க்காமலே கூட நல்லா குடிக்கலாம்.
எப்படி குடிக்கலாம்?
நன்றாக பழுத்த தர்பூசணியை துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அடித்து ஜூஸ் எடுக்கலாம். சிலர் லேசா எலுமிச்சை சாறு சேர்த்தும் குடிப்பாங்க, அது taste-க்கு நல்ல மாற்றம் கொடுக்கும். குளிர்ச்சியாக வைத்துக் குடித்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
அதன் நன்மைகள்
தர்பூசணி ஜூஸ் உடலை குளிர்விக்க உதவுகிறது, நீர்ச்சத்தை சமப்படுத்துகிறது, சோர்வை குறைக்கிறது, மேலும் உடம்பை லேசாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. கோடைக்காலத்தில் தினமும் ஒரு கப் குடித்தால் வெயிலின் தாக்கம் குறைவாக உணரலாம்.
மேலும் படிக்க: கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய பானங்கள்
வெயில் அதிகமாக இருக்கும் போது உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆனால் சில பானங்கள் அந்த நேரத்தில் உடம்பை மேலும் சூடாக்கவும், சோர்வை அதிகரிக்கவும் செய்யலாம்.
முதலில் அதிகமாக கார்பனேட்டட் குளிர்பானங்கள் (soft drinks) தவிர்ப்பது நல்லது. குடிக்கும் போது குளிர்ச்சியாக தெரிந்தாலும், உடம்பில் நீர்ச்சத்தை குறைத்து மீண்டும் தாகத்தை அதிகரிக்கச் செய்யும். அதிக கஃபீன் உள்ள காபி, எனர்ஜி டிரிங்க்ஸ் போன்றவையும் உடம்பை உள்ளுக்குள் சூடாக்கும் தன்மை கொண்டது. வெயிலில் ஏற்கனவே சோர்வாக இருக்கும் போது இது கூடுதல் அழுத்தம் தரும்.
அதே மாதிரி அதிக சர்க்கரை உள்ள packed ஜூஸ்களும் நல்ல தேர்வு இல்லை. இயற்கையான பழச்சாறுகளுக்கு பதிலாக இவை உடம்புக்கு எந்த பலமும் தராது. கோடைக்காலத்தில் இயற்கையான நீர்ச்சத்து நிறைந்த பானங்களை தேர்வு செய்தால் தான் உடல் சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
கோடைக்கால ஆரோக்கிய பழக்கவழக்கங்கள்
- தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
- வெளியில் செல்லும் போது தொப்பி அல்லது குடை பயன்படுத்தவும்.
- பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் சாப்பிடுங்கள்.
- இரவில் போதுமான தூக்கம் பெறுங்கள்.
முடிவுரை
கோடைக்காலத்தில் உடலை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சிறிய மாற்றங்களே போதுமானது. இயற்கையான பானங்களை தேர்வு செய்வது, போதுமான தண்ணீர் குடிப்பது, சரியான உணவுப் பழக்கங்களை கடைபிடிப்பது போன்றவை உடல் சோர்வை குறைத்து சுறுசுறுப்பாக இருக்க உதவும். வெயிலின் தாக்கத்தை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும், நம்முடைய தினசரி பழக்கவழக்கங்களை சரியாக வைத்துக்கொண்டால் கோடைக்காலத்தையும் எளிதாக சமாளிக்கலாம்.
மேலும் படிக்க:
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிக்கிறீர்களா? தெரிந்து கொள்ள வேண்டிய நன்மைகள்!
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
இந்த கட்டுரை பொதுமக்களுக்கு கிடைக்கும் தகவல்கள் மற்றும் நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions)
கோடைக்காலத்தில் உடல் அதிகமாக வியர்வை வெளியேற்றுவதால், நீர் மற்றும் minerals இழப்பு அதிகமாகும். இதை சமப்படுத்த இயற்கை பானங்கள் மிகவும் உதவுகின்றன. இளநீர், மோர், நன்னாரி போன்ற பானங்கள் hydration மட்டுமல்லாமல், உடல் சூட்டை குறைத்து, energy-ஐ maintain பண்ண உதவுகின்றன. Artificial drinks instant cool feel தரலாம், ஆனால் natural drinks உடலை உள்ளிருந்து balance பண்ணும்.
காலை நேரம், மதியம் வெயிலில் வெளியே போயிட்டு வந்த பிறகு அல்லது உடல் dehydrated feel ஆகும் நேரங்களில் இந்த பானங்களை எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக மதிய நேரத்தில் இவை உடலை உடனடியாக refresh பண்ணும். Night time-ல் heavy quantity avoid பண்ணுவது நல்லது, digestion-க்கு light-ஆ இருக்க வேண்டும்.
ஆம், தினமும் ஒரே பானம் குடிப்பதை விட, இந்த 4 பானங்களையும் மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டால் body-க்கு variety nutrients கிடைக்கும். இது boredom இல்லாமல் healthy habit maintain பண்ண உதவும். Balanced intake தான் முக்கியம்.
இயற்கை பானங்கள் பொதுவாக low-calorie மற்றும் healthy ஆக இருக்கும். sugar சேர்க்காமல் எடுத்துக்கொண்டால் weight gain ஏற்படுத்தாது. மோர், இளநீர் போன்றவை weight management-க்கும் உதவக்கூடியவை. ஆனால் அதிகமாக sweeteners சேர்த்தால் அதன் benefit குறையும்.
ஆம், தர்பூசணி 90% நீர் கொண்டது; இது உடலை உடனடியாக குளிர்விக்கும் சிறந்த இயற்கை பானம்.
ஆம், குழந்தைகளுக்கும் இந்த பானங்கள் safe மற்றும் beneficial. இது அவர்களின் hydration மற்றும் energy-ஐ maintain பண்ண உதவும். ஆனால் அளவாக கொடுக்க வேண்டும், குறிப்பாக நன்னாரி அல்லது juice வகைகளில் sugar சேர்க்காமல் கொடுத்தால் நல்லது. Natural taste-க்கு பழக வைப்பது முக்கியம்.
Author Bio
இந்த கட்டுரையை எழுதியவர்: ராஜேஸ்வரி (Rajeswari K)
Rajeswari K அவர்கள் ஆரோக்கியம் மற்றும் மனநலம் தொடர்பான தகவல்களை எளிய தமிழில் பகிர்ந்து வரும் content writer ஆவார். தினசரி வாழ்க்கையில் பயன்படும் ஆரோக்கிய பழக்கங்கள், உணவு முறைகள் மற்றும் மனநலம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவது இவரது கட்டுரைகளின் முக்கிய நோக்கம்.
இந்த கட்டுரைகள் பொதுவான தகவல் மற்றும் விழிப்புணர்விற்காக எழுதப்பட்டவை. மருத்துவ ஆலோசனைக்குப் பதிலாக அல்ல. உடல்நல தொடர்பான முக்கிய முடிவுகளுக்கு தகுதியான மருத்துவரை அணுகுவது அவசியம்.




